கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக்காக சிம்லா, மணாலிக்கு சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், கடந்த 24 மணி நேரத்தில் அப்பகுதியில் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக குறைந்தது 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், ஹிமாச்சலில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உட்பட குறைந்தது 223 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிம்லா, குலு, மண்டி, சம்பா மற்றும் சிர்மௌர் மாவட்டங்களுடன் கின்னவுர், லாஹவுல் மற்றும் ஸ்பிதி ஆகிய இடங்களில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.
இருப்பினும், பனி நிறைந்த மலைவாசஸ்தலங்களுக்குச் செல்லும் வழியில் மோசமான வானிலை மற்றும் ஆபத்தான சூழ்நிலைகள் சுற்றுலாப் பயணிகளின் பயணத்தை தடுக்கவில்லை.
இதனிடையே, திங்கள்கிழமை (23) அடல் சுரங்கப்பாதையில் சிக்கித் தவித்த சுமார் 500 வாகனங்களில் சுற்றுலாப் பயணிகளை மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவினர் மீட்டனர்.
கடந்த 24 மணி நேரத்தில் பல வாகனங்கள் சாலையிலிந்து சறுக்கி விபத்துக்குள்ளானதால் குறைந்தது நான்கு பேர் இறந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
சிம்லாவில் 145 சாலைகளும், குலுவில் 25 சாலைகளும், மண்டி மாவட்டங்களில் 20 சாலைகளும் மூடப்பட்டன.
356 மின்மாற்றி பழுதடைந்ததால் பல பகுதிகள் மின்சாரம் தடைபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.