இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நேபாளம் (Nepal) செல்கிறார்.
அவர் தனது தனிப்பட்ட பயணமாக நேபாளம் வர உள்ளார் என்று அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் கிருஸ்ண பிரசாத் தகால் ( Krishna Prasad Dhakal) தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதியாக அவருக்கு தேவையான நெறிமுறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தமது பயணத்தின் ஒரு பகுதியாக லும்பினிக்கும் செல்லவுள்ளார்.
இதனையடுத்து ரணில் ஜனவரி முதலாம் திகதி நாடு திரும்பவுள்ளார்.
முன்னதாக ரணில் விக்ரமசிங்க இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். இதன்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கும் இறுதி மரியாதையை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.