மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG) நடைபெற்று முடிந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை பார்வையிட வந்த ரசிகர்களின் மொத்த எண்ணிக்கையானது திங்களன்று (30) புதிய சாதனையை எட்டியது.
அதன்படி, மெல்போர்னில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா இடையேயான 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபியின் மோதலை காண 350,000 க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மொத்தமாக ஐந்து நாட்களிலும் வருகை தந்ததாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா திங்களன்று (30)தெரிவித்துள்ளது.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், அவுஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டிக்கான ஆல்-டைம் வருகை சாதனையை 5 ஆம் நாள் மதிய உணவுக்கு முன் முறியடித்தது.
ஒரு கட்டத்தில் மொத்த எண்ணிக்கையானது 351,104 ஆக உயர்ந்து 87 ஆண்டுகளாக சாதனையை முறியடித்தது.
அந்தக் கூட்டம் பிற்பகலில் இறுதியில் 74,362 ஆக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1937 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஷஸ் தொடரின் போது 350,534 ரசிகர்கள் ஆறு நாட்களில் கலந்துகொண்டதன் மூலம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் முன்னைய சாதனை படைக்கப்பட்டது.
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை பார்வையிட 5 நாட்களின் வருகை தந்த ரசிகர்களின் எண்ணிக்கையை இங்கே காணலாம்:
முதல் நாள் – 87,242
இரண்டாம் நாள் – 85,147
மூன்றாம் நாள் – 83,073
நான்காம் நாள் – 43,867
ஐந்தாம் நாள் – 74,362