முன்பதிவு செய்யப்பட்ட ஆசனங்களுக்கான சீட்டுகள் மற்றும் அதற்கான பணத்தை திரும்பப் பெறுவது தொடர்பான விசேட அறிவிப்பினை இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில்,
ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யும் போது பயணிகளின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை உள்ளிடுவது கட்டாயம்.
ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயிலுக்குள் நுழைவுச்சீட்டை சரிபார்க்கும்போது பயணச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண்ணை சரிபார்த்து உறுதிப்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனவரி 1 ஆம் திகதி முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைக்கான சீட்டுகளை திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு நகலை ரயில் நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.