சித்தார்த்தின் 40 ஆவது திரைப்படத்தை 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். அவருக்கு தங்கையாக மீதா ரகுநாத்தும் அப்பா அம்மாவாக சரத் குமார், தேவயாணியும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். அம்ரித் ராம்நாத் கடந்தாண்டு வெளியான வருஷங்களுக்கு சேஷம் என்ற மலையாள திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சித்தார்த்தின் 40-வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு 3 BHK என்று பெயரிட்டுள்ளனர். இப்படம் 3 BHK வீடு வாங்க ஆசைப்படும் குடும்பத்தின் கதையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.