டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை அயர்லாந்து அணி படைத்துள்ளது.
அயர்லாந்து அணி 10 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் விளையாடியுள்ள நிலையில் குறித்த சாதனையைத் தன்வசப்படுத்தியுள்ளது.
இதற்கு முன் 14 போட்டிகளில் விளையாடி தென்னாப்பிரிக்க அணி ஹெட்ரிக் வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது.
தென்னாப்பிரிக்கா வசமிருந்த சாதனையை தற்போது அயர்லாந்து அணி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.