சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாக தயாரிப்பாளர்கள் திங்கட்கிழமை (10) அறிவித்தனர்.
முன்னதாக வெளியான படத்தின் அறிவிப்பு வீடியோ ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது.
முன்னர் அறிவிக்கப்பட்டபடி படப்பிடிப்பு இன்று தொடங்கியதுடன், ரஜினிகாந்த்தும் படப்பிடிப்பு தளத்தில் இணைந்தார்.
2023 ஆகஸ்ட் மாதம் வெளியான ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து, திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.
வெளியீட்டு திகதி மற்றும் ஏனைய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.