எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டு நிகழ்வினை முன்னிட்டு ஏப்ரல் 01 முதல் 13 ஆம் திகதி வரை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சலுகை விலையில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியை வழங்குவதற்கான முன்மொழிவு 2025 வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த வகையில், 5000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதியை 2,500 ரூபாவுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 01 முதல் 13 வரை லங்கா சதோச விற்பனை நிலையங்கள் மற்றும் இலங்கை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு விற்பனை நிலையங்கள் மூலம் பயனாளிகளுக்கு உணவுப் பொதியை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.