15 வயது பாடசாலை மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தமை தொடர்பில் ஆறு மாணவர்கள் உட்பட ஏழு சந்தேக நபர்கள் ஹோமாகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது பெற்றோர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் வைத்திய பரிசோதனைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் மாணவி மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறி, தனது காதலனைச் சந்திக்கச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அந்த சிறுவன் அவளை ஹோமகமவில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், சிறுவன் அவளை காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை தனது மூன்று நண்பர்களின் வீடுகளுக்கு அழைத்துச் சென்றதாகவும், அந்த நேரத்தில் சிறுவனும் அவனது நண்பர்களும் அவளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹோமாகமவில் உள்ள ஒரு பாடசாலை மாணவர்கள் மற்றும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
சந்தேக நபர்களில் ஐந்து பாடசாலை மாணவர்கள் 15 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், மற்ற இரண்டு சந்தேக நபர்கள் 17 முதல் 19 வயதுடையவர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் சிறுமியை கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.