எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்கான மேலும் 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது.
அதன்படி, வேட்புமனுக்களை ஏற்க சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
முன்னதாக அந்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.
பிறப்புச் சான்றிதழ்கள், சமாதான நீதிவான்களின் சான்றளிப்பு மற்றும் அரசியலமைப்பின் 7 ஆவது அட்டவணையின் கீழ் எடுக்கப்பட்ட சத்தியப்பிரமாணம் ஆகியவற்றில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக இந்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
கடந்த வாரம், முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சித் தேர்தலுக்கான 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.