கிளிநொச்சி, தருமபுரம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான 86 கிலோ கேரள கஞ்சாவை பொலிஸார் நேற்றைய தினம் பறிமுதல் செய்தனர்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவிலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி விசேட அதிரடிப் படை மற்றும் கிளிநொச்சி பொலிஸார் நடத்திய சோதனையின் போது, இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சோதனையின் போது, யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்த 28 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன், போதைப்பொருள் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.