தெலுங்கானாவின் சங்கரெட்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் இன்று (30) ஏற்பட்ட மிகப்பெரிய வெடி விபத்தில் குறைந்தது பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொலிஸாரின் கூற்றுப்படி பாஷமிலராமில் அமைந்துள்ள சிகாச்சி இரசாயன தொழிற்சாலையில் அணு உலை வெடித்ததைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடி விபத்தில் தொழிலாளர்கள் 100 மீட்டர் தூரம் வரை தூக்கி வீசப்பட்டதாகவும், தீப் பரவலை தொடர்ந்து அருகிலுள்ள கூடாரங்களில் பலர் சிக்கிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தில் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
காயமடைந்த பல தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
வெடிப்புக்கான உறுதியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.



















