மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தனது புதிய காட்சியறையை ஜூலை 15 ஆம் ஆம் திகதி மும்பையின் ஜியோ வேர்ல்ட் டிரைவில் திறக்கவுள்ளது.
பல வருட திட்டமிடல் மற்றும் ஊகங்களுக்குப் பின்னர் இந்திய சந்தையில் நுழைய விரும்புவதால், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மின்சார வாகன (EV) தயாரிப்பாளருக்கு இது ஒரு முக்கிய படியாகும்.
பில்லியனர் எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனம், இந்திய சந்தையில் நுழைவதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதத்தில் மும்பையில் உள்ள இடத்திற்கான குத்தகையைப் பெற்றது.
4,000 சதுர அடி பரப்பளவிலான இந்த காட்சியறை மும்பையின் ஆடம்பர சில்லறை விற்பனை இடங்களில் ஒன்றில், நகரின் ஆப்பிள் ஃபிளாக்ஷிப் காட்சியறைக்கு அருகில் அமைந்துள்ளது.
இந்த இடம் பார்வையாளர்கள் டெஸ்லாவின் மின்சார கார்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களை ஆராயவும் அனுமதிக்கும்.
இதனிடையே, டெஸ்லா அதன் குறைந்து வரும் விற்பனை எண்ணிக்கையுடன் போராடி வருகிறது.
மேலும் கடந்த 6 மாதங்களில் அதன் பங்கு 23.17% சரிவைக் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
















