ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற ஒரு அற்புதமான இறுதிப் போட்டியில் ஜானிக் சின்னர் 4-6 6-4 6-4 6-4 6-4 என்ற செட் கணக்கில் கார்லோஸ் அல்கராஸை தோற்கடித்து தனது முதல் விம்பிள்டன் கிண்ணத்தையும் நான்காவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றினார்.
இந்த வெற்றியுடன் கடந்த மாத பிரஞ்சு ஓபன் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரரிடம் ஏற்பட்ட தோல்விக்குப் பழிவாங்கினார்.
லண்டனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவின் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் சின்னர் பெரும் போராட்டத்துக்கு மத்தியில் இரண்டு முறை நடப்பு சாம்பியனான கார்லோஸ் அல்கராஸை தோற்கடித்தார்.
இந்த வெற்றியுடன் விம்பிள்டன் ஒற்றையர் பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற பெருமையை 23 வயதான சின்னர் பெற்றார்.
இந்த வெற்றி 22 வயதான ஸ்பெயின் வீரரான அல்கராஸின் பல தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.















