கடந்த ஜூன் 30 ஆம் திகதியுடன் முடிவடைந்த 2025 ஆம் நிதியாண்டின் காலாண்டில் இலங்கை மின்சார சபை (CEB) ரூ. 5.31 பில்லியன் இலாபத்தைப் பதிவு செய்ய முடிந்தது.
இந்த காலாண்டில் CEB இன் இலாபம் ஒரு தனித்துவமான முன்னேற்றமாகும்.
முந்தைய காலாண்டில், அதாவது 2025 மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டில் ரூ. 18.47 பில்லியன் இழப்பை CEB பதிவு செய்திருந்தது.
2025 ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்சார கட்டண திருத்தத்தின் மூலம் CEB இலாபத்தை ஈட்டும் பாதையில் நுழைய முடிந்தது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
எனினும், 2025 ஜூன் காலாண்டில் ஈட்டிய இலாபம், 2024 ஜூன் காலாண்டில் CEB ஈட்டிய ரூ.34.53 பில்லியனுடன் ஒப்பிடும்போது 85% குறைவு ஆகும்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, 2025 ஜனவரியில் மின்சாரக் கட்டணங்கள் சுமார் 20% குறைக்கப்பட்டன.
இது 2025 மார்ச் காலாண்டில் அறிவிக்கப்பட்ட இழப்புக்கு கணிசமாக பங்களித்தது.















