சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்மைய திரைப்படமான ‘கூலி’ முதல் வார இறுதியில் பாக்ஸ் ஆபிஸில் ஒரு அற்புதமான வசூலைப் பெற்றது.
லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படம் முதல் நான்கு நாட்கள் உலகம் முழுவதும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளைக் கண்டது.
உள்நாட்டு பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் 200 கோடி இந்திய ரூபாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது.
முதல் வார இறுதியில் இந்தப் படம் உலகளவில் 400 கோடி இந்திய ரூபாவை வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் திகதி இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூலைப் பெற்றது.
எனினும், ஆகஸ்ட் 15 முதல் வசூலின் வேகம் படிப்படியாக குறைந்து வருகிறது.
இருப்பினும், படம் ஒவ்வொரு நாளும் 30 கோடி ரூபாவை வசூலை விஞ்சி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்காணிப்பு வலைத்தளமான Sacnilk கின் கூற்றுப்படி, வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை (17) இந்தப் படம் இந்தியாவில் தோராயமாக ரூ. 35 கோடி நிகர வசூலை ஈட்டியது.
வர்த்தக ஆய்வாளர் ரமேஷ் பாலா, ஒரு எக்ஸ் பதிவில், ‘கூலி’ படத்தின் முதல் வார இறுதி வசூல் உலகளவில் சுமார் ரூ.410 கோடி என்று கூறியுள்ளார்.
இருப்பினும் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் காத்திருக்கிறது.
கூலி திரைப்படத்தின் இந்திய வசூல்
- முதல் நாள் : 65 கோடி
- இரண்டாம் நாள்: 54.75 கோடி
- மூன்றாம் நாள்: 39.5 கோடி
- நான்காம் நாள்: 35 கோடி
- மொத்தம்: 194.25 கோடி
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜுனா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், சார்லி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
இந்த வணிக ரீதியான பொழுதுபோக்கு படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
கன்னட நடிகர் உபேந்திரா, போலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் இந்த படத்தில் சிறப்பு வேடங்களில் தோன்றினர்.
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் மற்றும் எடிட்டர் பிலோமின் ராஜ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.



















