எதிர்வரும் சிம்பாப்வே தொடருக்கு இலங்கை அணி தயாராகும் நிலையில், முன்னாள் ஜாம்பவான் லசித் மலிங்க இன்று (19) தேசிய ஆடவர் அணியின் பயிற்சி அமர்வுகளில் இணைந்தார்.
சிம்பாப்வே தொடருக்காக இலங்கை அணி நாட்டிலிருந்து புறப்படும் வரை, மலிங்க அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவார், தந்திரோபாய நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குவார்.
சிம்பாப்வே அணியுடனான வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடருக்காக இலங்கை அணி எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
இந்தத் தொடரில் இலங்கை அணி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், மூன்று டி:20 போட்டிகளிலும் சிம்பாப்வே அணியுடன் விளையாடும்.
ஹராரேயில் ஆகஸ்ட் 29 ஆம் திகதியுடன் ஆரம்பமாகும் முதலாவது ஒருநாள் போட்டியுடன் தொடர் ஆரம்பமாகும்.






















