சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா முறைப்பாடு செய்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடளித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆனதாக கூறி புகைப்படத்தை சில வாரங்களுக்கு முன்பு ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டிருந்தார்.
திருமண புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்த ஜாய் கிரிஸில்டா, தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகப் பதிவிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர் என்றும் அவர் சட்டப்படி விவாகரத்து பெறாதவர் என்றும் கூறப்படுகிறது.
இந்த விடயம் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராமில் ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.
இதனையடுத்து ஜாய் கிரிஸில்டா சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் முறைப்பாடளித்துள்ளார்.



















