மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் பவுசர் ஒன்றும் மோதியே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம நுழைவாயிலுக்கு அருகிலுள்ள 41 ஆவது கிலோ மீட்டர் கம்பத்துக்கு அருகில் நேற்று இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பலத்த காயமடைந்த பவுசரின் உதவியாளர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பவுசர் சாரதி வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தின் காரணமாக லொறி அதிவேக நெடுஞ்சாலையை விட்டு விலகி லொறி மீது கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.















