விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொலைக்காட்சித் தொடரான சிறகடிக்க ஆசை ரசிகர்களின் அபிமானத்தை வென்ற தொடராக உருவெடுத்து வருகின்றது.
இத்தொடரில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களுடன் ஒப்பிடுகையில், வில்லியாக நடிக்கும் ரோகிணி என்ற பாத்திரம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இக் கதாபாத்திரத்தில் ஆழமான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகை சல்மா, தொடரின் மிக முக்கியமான புள்ளியாக வளர்ந்துள்ளார்.
கதையின் திருப்பமாக வில்லி ரோகிணி
இத் தொடரின் கதையைப் பொருத்தவரை, ரோகிணி தன் முதல் திருமணத்தையும், அதன் மூலம் பிறந்த மகனையும் மறைத்து, இரண்டாவது திருமணம் செய்து கொள்கின்றார்.
தனது இரண்டாம் கணவனின் வீட்டில் எந்த விதமான சந்தேகமுமின்றி வாழ்ந்து வரும் அவர் வீட்டில் எப்போது சிக்கப் போகிறார் என்பதே ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில், நடிகை சல்மாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















