தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக விளங்குபவர் அஜித் குமார்.
சினிமா தாண்டி கார் பந்தயத்திலும் அசத்தி வரும் அவர், அண்மையில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3 ஆவது இடம் பிடித்தார்.
மேலும், இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.
இந்த நிலையில், “The hollywood reporter india” மாத இதழ் ஒன்றின் அட்டை புகைப்படத்திற்கும், நேர்காணலுக்கும் நடிகர் அஜித் குமார் படப்பிடிப்பில் கலந்து கொண்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நவம்பர் மாதத்திற்கான இதழில் அஜித் குறித்த பலரும் அறிந்திராத தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.























