கல்பிட்டி, உச்சமுனை களப்பில் நேற்று (04) நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்படை சுமார் 38 கிலோ கிராம் கஞ்சாவுடன் 02 டிங்கி படகுகளை கைப்பற்றியது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி ரூ.08 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கஞ்சா மற்றும் டிங்கி படகு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
















