பிரேசில் நாட்டின் பெலெம் நகரில் COP30 எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சிமாநாடு தொடங்கியுள்ளது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
2030-ஆம் ஆண்டுக்குள் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல், காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கவும், பூமியின் வெப்பநிலையை 2 டிகிரி அளவுக்குக் குறைப்பது குறித்தும் உலக நாடுகளை வலியுறுத்தும் வகையிலும் இந்த உச்சிமாநாடு நடைபெறுகிறது.
இந்த நிலையில், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில், இரு கட்டடங்களுக்கு இடையே கட்டப்பட்ட 55 மீட்டர் நீள கயிற்றின் மீது, கிரீன்பீஸ் அமைப்பைச் சேர்ந்தவர் நடந்து சென்றார்.
பெலெம் உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான உறுதியான தீர்மானங்களை வலியுறுத்தி அவர் இந்த முயற்சியை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.



















