The Base of the Baseless (தி பேஸ் ஒப் தி பேஸ்லெஸ்) திரைப்படம் எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஷைசன் பி.உசுப் இயக்கத்தில் ட்ரை லைட் கிரியேஷன்ஸ் சார்பில் சான்ட்ரா டிசோசா ராணா தயாரிப்பில் வின்சி அலாய்சியஸ், சோனால் மொஹந்தி, அஜிஸ் ஜோசப் நடித்துள்ள திரைப்படம் தி பேஸ் ஒப் தி பேஸ்லெஸ்.
கிறிஸ்தவ அருட் சகோதரியான ராணி மரியாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.


















