அபர்டீனின் கடற்கரையில் உள்ள Valaris 121 எண்ணைத்தளத்தில் பணிபுரியும் போது 32 வயதான லீ ஹல்ஸ் (Lee Hulse) எனும் ஊழியர் ஒருவர் க்ரேனில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இவரின் உயிரிழப்பு குறித்து விசராணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4:40 மணியளவில் இங்கிலாந்தின் வடக்கு கடல் எண்ணெய்த் தளத்தில் துளையிடும் க்ரேனில் இருந்து தவறி விழுந்து குறித்த ணப்ர உயிரிழந்த நிலையில் சம்பவம் குறித்து உடனடியாக ஸ்காட்லாந்து பொலிசாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் ஸ்காட்லாந்து மற்றும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நிர்வாகம் (HSE) ஆகியவை விசாரணை நடத்திவருகின்றனர்.
இருப்பினும் இந்த மரணம் சந்தேகத்திற்குறியது அல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறித்த ஊழியரின் உயிரிழப்பு குறித்து Valaris நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளதுடன் எண்ணெய் தளத்தின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் அவரது குடும்பத்தினருக்காக GoFundMe நிதி நிறுவனத்தின் மூலமாக £15,000 உதவி தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
















