இந்திய அரசின் சார்பாக, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை பேரிடர் நிலையினை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளன.
ஒற்றுமையின் அடையாளமாக, இந்தியா ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ் நிவாரணப் பொருட்கள் மற்றும் முக்கிய மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் (HADR) ஆதரவை அனுப்பியுள்ளது.
உதவின் பொருட்களில் 4.5 தொன் உலர் உணவுப் பொருட்கள், 2 தொன் சமைத்த உணவுப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய நிவாரணப் பொருட்களும் அடங்கும்.


இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் உதயகிரியுடன் இணைந்து, இலங்கை கடற்படையால் நவம்பர் 27 முதல் நவம்பர் 29 வரை கொழும்பில் நடத்தப்படும் 2025 சர்வதேச கடற்படை மீளாய்வில் (ஐஎஃப்ஆர்) இந்திய கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நடைபெறும் இந்த நிகழ்வில், பல நாடுகளைச் சேர்ந்த கடற்படைக் கப்பல்கள், பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர்.
தித்வா சூறாவளியால் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.














