பேரிடர் சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து உதவிப் பொருட்களை சுமந்து வந்த விமானம் இன்று (02) நாட்டிற்கு வந்துள்ளது.
ஜனாதிபதி ஊடப் பிரிவின் தகவலின்படி, இந்த நன்கொடையில் உணவு, கூடாரங்கள் உள்ளிட்ட மனிதாபிமான உதவிகள் பெருமளவில் அடங்கும்.







கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ரஷீத் அலி அல் மஸ்ரூய், வெளியுறவு அமைச்சின் பணிப்பாளர் (மத்திய கிழக்கு) திருமதி சேவ்வந்தி டி சில்வா, இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மேஜர் ஜெனரல் சுமேதா விஜேகோன் மற்றும் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்லா ஆகியோரிடம் நிவாரணப் பொருட்களை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.












