2026 இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மினி-ஏலத்திற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இதில் மயங்க் அகர்வால், கே.எஸ் பரத், ராகுல் சாஹர், ரவி பிஷ்னோய், ஆகாஷ் தீப், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், சர்பராஸ் கான், பிருத்வி ஷா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் இந்தியா சார்பில் பதிவு செய்யப்பட்ட முன்னணி வீரர்கள் ஆவர்.
எனினும், 13 சீசன்கள், 141 போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க வீரரான கிளென் மேக்ஸ்வெல் ஏலத்தில் இல்லை.
ஐ.பி.எல்.லில் மறக்க முடியாத பல சீசன்களுக்குப் பின்னர், இந்த ஆண்டு என் பெயரை ஏலத்தில் சேர்க்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். இது ஒரு பெரிய தீர்மானம் என்று மேக்ஸ்வெல் இன்ஸ்டாகிராம் மூலம் தனது முடிவு குறித்து அறிவித்துள்ளார்.

மினி-ஏலம் டிசம்பர் 16 அன்று அபுதாபியில் நடைபெறுகிறது.
சரியாக 1,355 வீரர்கள் ஏலத்துக்காக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முன்னணி சர்வதேச பெயர்கள் 13 பக்க பதிவேட்டினை நிரப்புகின்றன.
மொத்தமான பதிவேட்டில் 1,062 இந்தியர்கள் மற்றும் 293 வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து,, அயர்லாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள், சிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
மலேசியாவிலிருந்தும் ஒரு வீரர் இடம் பெற்றுள்ளார்.
10 ஐ.பி.எல். உரிமையாளர்கள் ஏலத்தில் மொத்தமாக 237.55 கோடி இந்திய ரூபா பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.













