டித்வா சூறாவளியைத் தொடர்ந்து இலங்கைக்கான நிவாரணம், மீட்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, இலங்கைக்கான இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்னோடன், கொழும்புக்கான உயர் ஸ்தானிகர் நிமல் சேனாதீரவுடன் செவ்வாய்க்கிழமை (02) கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு குறித்து எக்ஸில் பதிவிட்ட கொழும்புக்கான உயர் ஸ்தானிகர்,
இலங்கை தொடர்பான இங்கிலாந்து அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவராக கட்சி சார்பில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஆதரவையும், பிரார்த்தனைகளையும் வழங்கினேன்.
அவசரநிலைக்கு இங்கிலாந்து அரசு உறுதியளிக்கும் 675,000 பவுண்ட்ஸ் மற்றும் நீண்ட காலத்திற்கு மீண்டும் நாட்டை கட்டியெழுப்பவும் சரிசெய்யவும் என்ன தேவைப்படும் என்பதைப் பற்றி நாங்கள் விவாதித்தோம் என்றும் கூறினார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்ட்ரூ ஸ்னோவ்டன், இலங்கை உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இங்கிலாந்து அரசாங்கத்துடன் இணைந்து அனைத்து உதவிகளையும் விரைவாகச் செய்வதை உறுதி செய்வதாகவும் கூறினார்.
இதனிடையே, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அண்மைய பாதகமான வானிலை நிலைமைகளைத் தொடர்ந்து மீட்பு முயற்சிகளை ஆதரிப்பதற்காக 890,000 அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியதற்காக இங்கிலாந்து அரசாங்கத்திற்கு வெளிவிகார அமைச்சர் விஜித ஹெராத் இலங்கை சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளார்.














