இலங்கை முழுவதும் நடைமுறையில் இருந்த அனைத்து முக்கிய வெள்ள எச்சரிக்கைகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசணத் திணைக்களம் இன்று (03) காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காலை 9:30 மணி அறிக்கையின்படி, முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதாகவும், தற்போது எந்த ஆறும் பெரிய வெள்ள மட்டத்தில் இல்லை என்றும் காட்டப்பட்டுள்ளது.
நாகலகம் வீதியில் உள்ள களனி ஆறு மட்டுமே எச்சரிக்கை நிலையில் உள்ளது.
எனினும், நீர் மட்டம் குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் அனைத்து கண்காணிக்கப்பட்ட நிலையங்களிலும் மழைப்பொழிவு குறைந்தபட்ச அளவிற்குக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












