இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உயிர்காக்கும் சுகாதார சேவைகளை ஆதரிப்பதற்காக உலக சுகாதார ஸ்தாபனம் 175,000 அமெரிக்க டொலர்களை அவசர நிதியாக வெளியிட்டுள்ளது.
இந்த நிதி அதிர்ச்சி சிகிச்சை, முதலுதவி, மருத்துவமனை சிகிச்சைக்கான பரிந்துரைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஆதரவை வழங்க விரைவான பதில் மருத்துவ மற்றும் பொது சுகாதார குழுக்களை ஈடுபடுத்தப் பயன்படுத்தப்படும்.
குழுக்கள் மருத்துவப் பரிசோதனையை நடத்துதல், சுகாதாரம் மற்றும் மருந்துத் தேவைகளை மதிப்பிடுதல், நீர் தரத்தை மதிப்பாய்வு செய்தல் மற்றும் சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார அபாயங்களை மதிப்பீடு செய்தல் ஆகியவற்றுக்கும் பங்களிக்கும்.
நாடு முழுவதும் பரவலான அழிவை ஏற்படுத்திய சூறாவளியைத் தொடர்ந்து இலங்கை அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம், விவசாயம், ஊட்டச்சத்து, கல்வி, நீர் மற்றும் சுகாதாரம், தங்குமிடம் மற்றும் பரந்த மீட்பு மற்றும் மீள்வாழ்வு முயற்சிகளுக்கான ஆதரவு உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான மற்றும் ஆரம்பகால மீட்பு உதவியை அரசாங்கம் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












