வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் 10வது கட்டத்திற்கான விண்ணப்பங்களை கோரும் காலம் 2025.11.01 முதல் 2025.11.30 வரை முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் 2022, 2023 அல்லது 2024 ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத் தாதர (உயர்தர) பரீட்சைக்கு அவர்களின் முதல் அல்லது இரண்டாம் தவணையாகத் தோற்றிய மாணவர்களை 2025 ஆம் ஆண்டில் மீண்டும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் நிலவும் சீரற்ற வானிலையையும் கருத்திற்கொண்டு இந்த கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் காலத்தை 2025.12.15ஆம் திகதி வரை நீட்டிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கல்வி உயர்க்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வட்டியில்லா மாணவர் கடன் திட்டம் தொடர்பான விண்ணப்பங்கள் www.studentloans.mohe.gov.lk எனும் வலைத்தளத்தின் ஊடாக இணையவழி மூலமாக சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளது.












