• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆதவனின் ஜோதிடம்
மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/12/18
in ஆதவனின் ஜோதிடம், இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை, பொத்துவில் மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related

Tags: RainWeatherகாற்றுமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இங்கிலாந்தில் சிசேரியன் முறை மூலமான பிரசவ விகிதம் அதிகரிப்பு!

Next Post

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

Related Posts

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –
இலங்கை

2026-03-13
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்க ஒன்றிணைவோம் – பிரதமர் ஹரிணி அமரசூரிய

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!
இலங்கை

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

2026-03-13
Next Post
கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

சீன தேசிய மக்கள் காங்கிரஸின் உப தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

நபர் ஒருவர் மீதான தாக்குதல்; பொலிஸ் அதிகாரி இடமாற்றம்!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

0
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

0
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

0
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

0
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

2026-03-13
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

2026-03-13
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

2026-03-13
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

2026-03-13
பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

பசியும் பட்டினியும்… இலங்கையை வாட்டும் வறுமை! கிராமப்புறங்களே பெரும் பாதிப்பு

2026-03-13

Recent News

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

2026-03-13
மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

2026-03-13
மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

2026-03-13
உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

2026-03-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.