மகாவலி ஆற்றின் துணை நதியான மனம்பிட்டிய ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
எனினும் அதனால், வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று நீர்ப்பாணசத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மகாவலி குளத்திலுள்ள சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) எல்.எஸ்.சூரியபண்டார தெரிவித்தார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தந்திரிமலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் ஓரளவு அதிகமாக இருந்தாலும், வெள்ளப்பெருக்கில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை என்றும்அவர் மேலும் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் நீர்த்தேக்கங்களைச் சுற்றி பதிவான மழையின் அடிப்படையில், அம்பாறை மாவட்டத்தில் அதிகபட்சமாக 25 மில்லி மீட்டர் மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 36 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த நீர்த்தேக்கங்களில் எதுவும் ஆபத்தான அளவில் தண்ணீரை வெளியேற்றவில்லை.
மேலும், 52 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தண்ணீரை வெளியேற்றுகின்றன, இது ஆற்றுப்படுகைகளை அண்மித்த மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றும் என்றும் எல்.எஸ்.சூரியபண்டார கூறினார்.














