நேற்று மாலை நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இன்று (23) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்க உள்ளார்.
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று மாலை (22) இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சிறப்பு விமானத்தில் இலங்கையை வந்தடைந்தார்.
இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையை இந்தப் பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும், டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவை நிவர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்ட ஆப்ரேஷன் சாகர் பந்து பின்னணியில் இது நடைபெறுகிறது.
அமைச்சர் ஜெய்சங்கர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று பிற்பகல் நாட்டை விட்டு வெளியேற உள்ளார் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.














