மும்பையின் குடிமைப் போக்குவரத்து நிறுவனமான பெஸ்ட்டின் பேருந்து ஒன்று பின்நோக்கிச் சென்று பாதசாரிகள் மீது மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றிரவு (29) இடம்பெற்ற இந்த விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஒன்பது பேர் காயமடைந்ததாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு 10.00 மணியளவில் புறநகர் பந்தப் (மேற்கு) பகுதியில் உள்ள பரபரப்பான ஸ்டேஷன் சாலையில் நடந்தது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதேநேரம், குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதனிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.















