2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் சீனாவில் கருத்தடை சாதனங்களுக்கு 13 சதவீத வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் குழந்தை பராமரிப்பு சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் நாடு பிறப்பு விகிதங்களை அதிகரிக்க முயற்சிக்கும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த வரி முறையின் மறுசீரமைப்பு, 1994 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த பல விலக்குகளை நீக்குகிறது.
முன்னதாக சீனா அதன் பல தசாப்தங்களாக ஒரு குழந்தை விதியை இன்னும் அமுல்படுத்தி வந்தது.
புதிய வரி மறுசீரமைப்பானது திருமணம் தொடர்பான சேவைகள் மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கான பெறுமதி சேர் வரியிலிருந்து (VAT) விலக்கு அளிக்கிறது.
அத்துடன், பெற்றோர் விடுமுறையை நீட்டித்தல் மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்குதல் உள்ளிட்டவையும் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்கான சீன அரசாங்கத்தின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.
சீனாவின் மக்கள் தொகை தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளாகக் குறைந்துவிட்டதாகவும், 2024 ஆம் ஆண்டில் வெறும் 9.54 மில்லியன் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இது ஒரு தசாப்தத்திற்கு முன்பு, மக்கள் எத்தனை குழந்தைகளைப் பெறலாம் என்பது குறித்த விதிகளை சீனா தளர்த்தத் தொடங்கியபோது பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கையில் பாதி ஆகும்.
















