வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத மதுபானம் அருந்தி இறந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் உடல்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மேலும், ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் பின்னர் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சந்தேகிக்கப்படும் சட்டவிரோத மதுபானத்தின் மூலத்தைக் கண்டறிய மாரவில பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.















