விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்குமாறு இந்திய மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திற்கு (CBFC) உத்தரவிட்டு, அதன் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக சென்னை மேல் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்தது.
இரு தரப்பு வாதங்களையும் கவனத்திற் கொண்டி நீதிபதி பி.டி. ஆஷா, படத்தின் இறுதி நிமிட ஒத்திவைப்புக்கு வழிவகுத்த ஒரு பெரிய தடையை நீக்கி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
தீர்ப்பைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் இன்னும் புதிய வெளியீட்டு திகதி அறிவிக்கவில்லை.
அறிக்கைகளின்படி, ஜனநாயகன் அடுத்த இரண்டு நாட்களுக்குள் திரையரங்குகளில் வெளியாகலாம் அல்லது ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையின் போது வெளியிடப்படலாம்.
அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு முன்பு விஜய்யின் இறுதிப் படமாக இது பரவலாகக் கருதப்படுவதால், ஜனநாயகன் மேலதிக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
















