“முழு நாடும் ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் நேற்று (18) முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது 925 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது மொத்தம் 932 சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது கைதான 23 சந்தேக நபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டன.
மேலும் 2 நபர்கள் புனர்வாழ்வுக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.
இதன்போது, ஹெரோயின், ஐஸ், கொக்கெய்ன், கஞ்சா மற்றும் குஷ் போன்ற போதைப்பொருட்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன.












