பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தேசியத் தலைவராக 45 வயதான நிதின் நபின் இன்று (20) முறையாகப் பதவியேற்றார்.
டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மூத்த இந்திய அரசியல்வாதியான நிதின் நபின், பீகார் சட்டமன்றத்தில் ஐந்து முறை உறுப்பினராகவும், பீகார் அரசாங்கத்தில் முன்னாள் அமைச்சராகவும் உள்ளார்.
அவரது தொடர்ச்சியான நிறுவன புத்திசாலித்தனம் மற்றும் நிர்வாக அனுபவத்திற்காக அவர் பரவலாக அறியப்படுகிறார்.
அதிகாரப்பூர்வமாக பணியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, நபின் டெல்லியில் உள்ள பல புகழ்பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாட்டிலும் பங்கெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.















