களுத்துறை பாலத்திலிருந்து கணக்காளர் ஒருவர் களு கங்கையில் குதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் உயிர்காப்புப் பிரிவினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தத் தேடுதல் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு பகுதியில் வசிக்கும் 32 வயதுடைய கணக்காளர் ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், அவரது கைப்பேசி பாலத்தின் மீது இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த கணக்காளர் பாலத்தை நோக்கி நடந்து செல்லும் காட்சிகள் அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் CCTV கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.












