நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் வியாழக்கிழமை (22) பெய்த கனமழையால் ஒரு முகாம் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இதனால், பலர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை மற்றும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 9:30 (20.30 GMT புதன்கிழமை) மணிக்கு மண்சரிவு ஏற்பட்டது.
நியூசிலாந்தின் வடக்கு கடற்கரையில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான மவுண்ட் மவுங்கானுயின் அடிவாரத்தில் அமைந்துள்ள முகாமே இந்த அனர்த்தத்துக்கு முகங்கெடுத்துள்ளது.
சம்பவ இடத்தில் இருந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றப்பட்டதாகவும், அப்பகுதியில் எஞ்சியிருக்கும் யாரையாவது கண்டுபிடிக்க அவசர சேவைகள் செயல்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.















