11 வயதுக்குட்பட்டோருக்கான இரண்டு உலக தரவரிசை மேசைப் பந்துப் போட்டிகளில் வெற்றி பெற்ற தவி சமரவீர (Tavi Samaraweera), இன்று (26) காலை நாடு திரும்பினார்.
அவர் ஓமானின் மஸ்கட்டிலிருந்து சலாம் ஏர் விமானம் OV-437 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
ஜனவரி 14 முதல் 18 வரை பஹ்ரைனில் நடைபெற்ற போட்டியில் தாவி சமரவீர தங்கப் பதக்கம் வென்றார்.
ஜனவரி 19 முதல் 25 வரை கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற உலக ஜூனியர் மேசைப் பந்து சாம்பியன்ஷிப்பில் 11 வயதுக்குட்பட்ட பிரிவிலும் அவர் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இன்னும் 10 வயதே நிரம்பிய தவி சமரவீர, கொழும்பு கல்கிசை புனித தோமஸ் கல்லூரியில் தரம் 6 இல் படிக்கும் மாணவர் ஆவார்.
மேலும் 11 வயதுக்குட்பட்ட மேசைப் பந்து வீரர்களுக்கான உலக தரவரிசையில் அவர் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.












