ஜப்பானின் ஹொன்ஷு (Honshu) தீவின் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் (JMA) தெரிவித்துள்ளது.
இதனால், இவாடே, ஆமோரி மற்றும் ஹொக்கைடோ மாகாணங்களில் 3 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

















