கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளடங்களாக 13 நாடுகளுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத் தடை விதித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் நேற்று(வியாழக்கிழமை) பயணத்தடை குறித்த அறிவித்தலினை வெளியிட்டுள்ளதாக நாட்டு அரச செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது.
இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, வியட்நாம், நமீபியா, சாம்பியா, காங்கோ, உகாண்டா, சியரா லியோன், லைபீரியா, தென்னாபிரிக்கா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கே இவ்வாறு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.















