திருமண நிகழ்வு மண்டபம் மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை 40% அதிகரிக்க அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம் தீர்மானித்துள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அதுல களுஆராச்சி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஏற்கனவே செய்யப்பட்ட முன்பதிவுகளுக்கு இது பொருந்தாது என்றும் புதிய முன்பதிவுக்கு மட்டுமே 40% உயர்வு பொருந்தும் என்று அவர் கூறினார்.
















