இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையே இடம்பெற்றுவரும் போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் இதுவரை காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,000 ஐ கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த ஓக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் காசாவில் 11,320 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், அவர்களில் 4,650 சிறுவர்கள் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுதவிர, 29,200 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் பாலஸ்தீனத்தின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
















