உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் இத்தாலியில் இடம்பெற்றுள்ளது.
திமித்ரி ஃபிரிகேனோ என்பவரே கடந்த 2017 ஆம் ஆண்டு தனது காதலியை 57 முறைகள் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சிறையில் இருந்தபோது அவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்தவகையில் ஆரம்பத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 120 கிலோவாக இருந்த திமித்ரியின் உடல் எடை கடந்த ஒரே ஆண்டில் 200 கிலோகிராமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் உடல் எடையை குறைக்கும் வகையில் தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி திமித்ரி தொடுத்த வழக்கை விசாரித்த டூரின் நீதிமன்றம், சிறையில் அவருக்கு கலோரிகள் குறைவான சிறப்பு உணவை வழங்க வழியில்லை என்பதால், அவரது பெற்றோர் இல்லத்திலேயே வீட்டுக் காவலில் இருந்து டயட் உணவை உட்கொள்ள அனுமதி அளித்துள்ளது.