சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில் போதை தரும் பேரின்பம் வேறுல்லதா ? பயணம் என்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு விடயமாகும். புல வேலை , மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணிகளக்கு பயணம் செய்வது என்பது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
பயணம் செய்யும் போது பெரும்பாலும் வெயில் , தூசு , மழை என எதையும் பார்ப்பது இல்லை. ஆனால் வீடு திரும்பியதும் முகம் , சருமம் பொலிவிழந்து காணப்படும். வெற்றை தகுந்த முறையில் பாதுகாக்க சில விடயங்களை கடைப்பிடிப்பது முக்கியமாகும் .
சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க எப்போதும் உயர்தர சன்ஸ்கிரீமைப் பாதுகாக்க எப்போதும் உயர்தர சன்ஸ்கிரீனை நீங்கள் எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் செல்ல வேண்டும். இது தோலில் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கிறது மற்றும் பயணத்தின் போது எவ்வித சரும பாதிப்பும் இல்லாமல் அதிக நேரம் நீங்கள் செலவிடலாம்.
வெயிலில் அல்லது குளிரில் வெளியில் செல்லும் போது சருமத்தில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைக் குறைக்க வேண்டும் என்றால் டோனரை நீங்கள் பயன்படுத்தலாம். இது தோலிலின் பிஎச் அளவைப் பராமரிப்பதோடு எதிர்காலத்தில் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மந்தமானத் தன்மையைத் தடுக்கிறது.
வெயில் காலத்தில் மட்டுமில்லை குளிர்காலத்திலும் உங்களது சருமம் வறண்டு போகும். எனவே நீங்கள் எப்போதும் பயணம் செய்தாலும் உங்களுடன் மாய்ஸ்சரைசரை எடுத்துச் செல்ல வேண்டும். இது சருமத்தில் உள்ள அழுக்கு, தூசிகள் பாதிப்பு ஏற்படுத்தாமல் தடுக்கிறது. மேலும் சருமத்துளைகளில் ஏற்படும் பாதிப்பைத் தடுப்பதோடு, மென்மையான மற்றும் மிருதுவான சருமத்தைப் பெறுவதற்கு உதவியாக உள்ளது
பொதுவாக வெளியில் சென்றாலே சருமத்தில் அழுக்குகள் அதிகளவில் படியும். அதிலும் நெடுந்தூர பயணம் செய்யும் போது காற்று மாசுபாட்டினால் முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே உங்களது முகத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது கழுவ வேண்டும்.